Enable Javscript for better performance
அக்.17 முதல் குறைதீர்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் கூட்டம் அக். 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடர்ந்து நடைபெறுகிறது.
    தமிழகத்தில் அக்.17,19ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலுக்கு வந்தது.
    இதன்படி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் இதர அரசு திட்டப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. இப்போது தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. 17ஆம் தேதி முதல் வழக்கம்போல குறைதீர் கூட்டம் நடைபெறும் எனவும், பொதுமக்கள் வழக்கம்போல மனுக்கள் அளிக்கலாம் எனவும் ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai