Enable Javscript for better performance
அஞ்சல் தினவிழா: கடிதம் அனுப்பும் விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    அஞ்சல் தினவிழா: கடிதம் அனுப்பும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 08th October 2016 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக அஞ்சல் தினவிழாவையொட்டி கடிதம் அனுப்பும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    உலக அஞ்சல் தினவிழா அக்டோபர் 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தியாகராஜநகரில் உள்ள புஷ்பலதா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி சார்பில் மாணவர்-மாணவிகளுக்கு கடிதங்கள் மற்றும் அஞ்சல் துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    மாணவர்-மாணவிகள் தங்களது தாத்தா, பாட்டி, மாமா, அத்தை உள்ளிட்ட பல்வேறு உறவினர்களுக்கும் அஞ்சல் அட்டைகளில் கடிதங்களை எழுதி அஞ்சல் பெட்டியில் போட்டனர். திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் பேசினார்.
    அஞ்சல் துறையின் சேவைகள் குறித்து மாணவர்களுக்கு தெரிவித்தார். உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் பொன்னையா, அஞ்சலக அதிகாரி ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சபாபதி, புஷ்பலதா பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai