Enable Javscript for better performance
அரசுப் பேருந்து மோதி முதியவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    தச்சநல்லூரில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவர் பலத்த காயமடைந்தார்.
    தச்சநல்லூர் மங்களாகுடியிருப்பைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (70). இவர் அங்கு பிரதானச் சாலையில் ஷீட் கவர் தயாரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை பிரதானச் சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மதுரையில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசுப் பேருந்து முத்துகிருஷ்ணன் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
    இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai