Enable Javscript for better performance
ஊத்துமலை காவல் ஆய்வாளருக்கு பிடி ஆணை- Dinamani

சுடச்சுட

    

    ஊத்துமலை காவல் ஆய்வாளருக்கு தென்காசி சார்பு நீதிபதி பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
    ஊத்துமலை காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் சக்கரவர்த்தி. கடந்த 25.06.2015இல் சென்னை அய்யம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி பீட்டர் அலெக்ஸாண்டர் என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு தென்காசி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பியும் இதுவரை ஆய்வாளர் சக்கரவர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையாம். இதையடுத்து, நீதிபதி திருவேங்கட சீனிவாசன், காவல் ஆய்வாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai