Enable Javscript for better performance
கோழிப்பண்ணைக்கு தீவைப்பு: ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    கோழிப்பண்ணைக்கு தீவைப்பு: ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

    By DIN  |   Published on : 08th October 2016 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணகுடி அருகே கோழிப்பண்ணைக்கு தீவைத்ததில், ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
    பணகுடியை அடுத்த அழகியநம்பிபுரத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் சுடர்முத்துகிருஷ்ணன்(36). இவர், பணகுடியை அடுத்த ரோஸ்மியாபுரத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இரவில் கோழிப்பண்ணையில் தங்கிவிடுவாராம். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கோழிப்பண்ணைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஓலை கூடாரத்துக்கு தீவைத்துவிட்டு, தப்பி விட்டனராம். இதில் 1,800 கோழிகள் தீயில் கருகி இறந்தனவாம். கோழிகளுடன் தீயில் எரிந்த பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் என போலீஸாரால் கணக்கிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பணகுடி போலீஸார் வழக்குப் பதிந்து, கோழிப்பண்ணைக்கு தீவைத்த மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai