Enable Javscript for better performance
சுத்தமல்லியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சுத்தமல்லியில் ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.
    பேட்டை-சுத்தமல்லி பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினருக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில் சுத்தமல்லி கொம்புமாடசாமி கோயில் அருகே சாலையோரம் இரும்பு பெட்டிகளால் ஆன கடைகளை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருநெல்வேலி வட்டாட்சியர் பாலமுருகன், அரசு நிலத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன்பேரில் சுத்தமல்லி கிராம நிர்வாக அலுவலர் முத்துசெல்வி, கிராம உதவியாளர் சூர்யதேவன் முன்னிலையில் பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai