Enable Javscript for better performance
சுந்தரனார் பல்கலை.யில் தடகள பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தடகள பயிலரங்கம் நடைபெற்றது.
    ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில், தங்கம் வென்றவரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகளப் பயிற்சியாளருமான ஏ.ராஜன் பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்தார்.
    தடகள பயிற்சி விதிமுறைகள், தடகள வீரரை தயார்படுத்துதல், தேர்வு செய்தல், தடகள வீரர்களுக்கான இலக்கு மற்றும் அவற்றை பெற கையாள வேண்டிய யுத்திகள் குறித்து இந்தப் பயிலரங்கில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
    உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறைத் தலைவர் ச.சேது, செ. துரை ஆகியோர் பயிற்சி அளித்தனர். இப் பயிலரங்கில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறை பேராசிரியர்கள், மாணவர், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai