Enable Javscript for better performance
தனியார் தங்கும் விடுதிக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தனியார் தங்கும் விடுதிக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலப்பாளையம் அருகே விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி தனியார் தங்கும் விடுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர்.
    மேலப்பாளையம் ஜெபா நகர் பகுதியில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதிக்கு, நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 40 இன் கீழ் திருநெல்வேலி உள்ளூர் திட்டக் குழுமத்திடம் திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், திட்ட அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் இந்த விடுதி செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
    இதையடுத்து 24 மணி நேரத்துக்குள் கட்டடத்தின் செயல்பாட்டை முழுமையாக நிறுத்திக் கொள்ள நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததாம். ஆனால் அவ்வாறு நிறுத்தப்படாததால் திருநெல்வேலி உள்ளூர் திட்டக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் வேல்முருகன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பாளையங்கோட்டை வட்டாட்சியர் நடராஜன், மாநகர காவல் உதவி ஆணையர் விஜயகுமார் உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.
    பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் ஜெபாநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai