Enable Javscript for better performance
தாழையூத்தில் நாய்கள் கடித்து 3 மான்கள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் நாய்கள் கடித்து 3 மான்கள் உயிரிழந்தன.
    கங்கைகொண்டானில் வனத்துறை சார்பில் மான்கள் பூங்கா உள்ளது. இங்கு பராமரிக்கப்படும் மான்கள் அங்கிருந்து தப்பி வழி தெரியாமல் தாழையூத்து பகுதிகளுக்குள் வரும். அவ்வாறு வரும்போது வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் மான்கள் உயிரிழக்கின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வழிதவறி வந்த 3 மான்களை நாய்கள் கடித்ததில் மான்கள் உயிரிழந்தன.
    தாழையூத்து பேச்சிநகர், சங்கர்நகர் பேரூராட்சி அலுவலகம் அருகில், சிப்காட் பகுதிகளில் மான்களின் சடலம் கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச் சரகர் தார்ஷியூஸ், வனவர் சரவணன் தலைமையிலான குழுவினர் மான்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai