Enable Javscript for better performance
நெல்லையில் ஹாஜிகளுக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஹஜ் கடமையை நிறைவேற்றித் திரும்பிய ஹாஜிகளுக்கு திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
    புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் மெக்கா சென்றனர். ஹஜ் கடமையை நிறைவேற்றிய பின்னர், அவர்கள் வெள்ளிக்கிழமை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருநெல்வேலி வந்தனர்.
    பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த செய்யதுமுகைதீன், அவரது துணைவியார் ஸஹர்பானு, மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ். ஹைதர்அலி, கரிசல் சிஎம்எஸ் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மேலப்பாளையத்தை சேர்ந்த முஹம்மது யூசுப், புரோஸ்கான், மீரான்முகைதீன் மற்றும் வீரவநல்லூரைச் சேர்ந்த முஹம்மது அலி ஜின்னா, அவரது துணைவியார் பவுசியா, கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த பி.கே.அப்துல்ஹமீது,அவரது துணைவியார் மீராள் மேலியாள்,ஷேக்மைதீன்,அவரது துணைவியார் கதிஜா, ஓய்வுபெற்ற இ.எஸ்.ஐ.அதிகாரி கே.பி.எஸ். முஹம்மது உசேன், அவரது துணைவியார் ஹமீதா உள்பட 25 க்கும் மேற்பட்ட ஹாஜிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    இந் நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட மதிமுக செயலர் கே.எம்.ஏ. நிஜாம்,மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி பொருளாளர் டி.ஏ. அப்துல்மஜித்,சதக்கதத்துல்லாஹ் அப்பா கல்லூரி மேலாளர் காதர்அவுலியா,முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் எஸ். சம்சுதீன்,அப்துல்மஜித்,ஏ.எம்.முகைதீன், மு.சாகுல்ஹூசேன்,கே.எஸ்.அப்துல்மஜித், ஜமாத்துல் உலமா சபை செயலர் அ. அபுபக்கர் சித்திக், பள்ளிவாசல் இமாம்கள் முஹிபுல்லாஹ்,முகம்மது இத்ரீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    இதைத் தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜூம்ஆ மஸ்ஜித்,பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல்,சத்திரம் தெரு பள்ளிவாசலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai