Enable Javscript for better performance
நெல்லை மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 139 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 139 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை

    By DIN  |   Published on : 08th October 2016 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 139 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவது மற்றும் கட்டுக்குள் வைப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி பொது ஒழுங்கு பராமரிப்பு, பொது சுகாதாரம் பராமரிப்பு ஆகியவற்றில் குந்தகம் விளைவிக்கும் நபர்கள், அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர் மீது குண்டர்கள் என்ற பெயரில் தடுப்புக் காவலில் அடைக்கப்படுகின்றனர். இதன்படி நிகழாண்டு இதுவரை 116 பேர் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மணல் திருடியது தொடர்பாக 9 பேர், கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 10 பேர், மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேர், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் 2 பேர் என மொத்தம் 139 பேர் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai