Enable Javscript for better performance
பாளை. யில் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டையில் பழைய மரக்கட்டைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் புகைமண்டலமாக காட்சியளித்தது.
    பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் ஜோதிபுரத்தில் தனியார் பல் மருத்துவமனைக்கு அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய மரக்கட்டையில் திடீரென வெள்ளிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தால், அப்பகுதியில் புகைமண்டலமாக காட்சியளித்தது.
    பாளையங்கோட்டை தீயணைப்படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் இருந்த கடை, கட்டடங்கள் சேதமின்றி தப்பியது. போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai