Enable Javscript for better performance
மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய தொழிலாளி- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டை அருகே மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
    பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழப்பாட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனை சித்ரா செல்வி (37). இவரது மகள் ரம்யா (17). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் வீட்டில் கொதித்துக் கொண்டிருந்த பாலை செல்வராஜ் எடுத்து சித்ரா செல்வி மீது ஊற்றினாராம். இதைத் தடுக்க வந்த ரம்யாவையும் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இருவரையும் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai