Enable Javscript for better performance
ராணுவ விளையாட்டுப் பள்ளிக்கு சிறார்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    ராணுவ விளையாட்டுப் பள்ளியில் சேர திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான சிறார்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் மு.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளார்.
    இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ந்திய ராணுவத்தின் தரைப்படை விளையாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் சிறார் விளையாட்டுப் பள்ளியில் மாணவர்கள் தேர்வு,நவம்பர் 21ஆம் தேதி புணேயில் நடைபெறுகிறது.
    இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள் மாநிலங்களுக்கு இடையேயான ஜூனியர்,சப்-ஜூனியர் பிரிவில் குத்துச் சண்டை, பளுதூக்குதல்,மல்யுத்தம்,வாள்சண்டை,தடகளம், நீச்சல் ஆகிய பிரிவுகளில் முதல் அல்லது இரண்டாமிடம் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் 11 முதல் 14 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும் 1.11.2002 மற்றும் 31.10.2005-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உணவு, தங்குமிடம், விளையாட்டுப் பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
    10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பதினேழரை வயது ஆனவுடன் ராணுவத்தில் சிப்பாயாகத் தேர்வு செய்யப்படுவர்.
    மேலும் விவரங்களுக்கு, ராணுவ விளையாட்டுப் பள்ளியின்  இணையதளத்திலும், 020-20265355, 26022928, 26881753 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai