Enable Javscript for better performance
அணு உலைகளுக்கு உதயகுமாரன் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    கூடங்குளத்தில் 3, 4ஆவது அணுஉலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றுமாறு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கூடங்குளத்தில் தொடங்கப்பட்டுள்ள முதல் இரண்டு அணுஉலைகளும் முடங்கிக் கிடக்கின்ற நிலையில், 3, 4ஆவது அணு  உலைகளுக்கான கான்கிரீட் பணியை ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும், பிரதமர் மோடியும் தொடங்கி வைக்கிறார்கள். தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்ட நிலையில் இந்த அணுஉலைகள் எதற்கு?
    எனவே, தமிழர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai