Enable Javscript for better performance
அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர்: மாநகராட்சி திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர்: மாநகராட்சி திட்டம்

    By DIN  |   Published on : 15th October 2016 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழைக்கால நோய்களைத் தடுக்கும் வகையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக நிலவேம்பு குடிநீர் விநியோகிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    இது தொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இ.புவனேஸ்வரி கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாநகராட்சி பகுதிகளில் முன்னெச்சரிக்கைப் பணிகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது.
    அனைத்து வார்டுகளிலும் கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் கீழ் செயல்படும் 9 சுகாதார நல மையங்களின் பணியாளர்களைக் கொண்டு அந்தந்த பகுதிகளில் காய்ச்சல்,இருமல்,சளி தொல்லையால் அவதிப்படுவோருக்கு நிவாரண மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    மாநகராட்சியின் முக்கிய நீராதாரமாகத் திகழும் தாமிரவருணிஆற்றில் மழைநீரும் சேர்ந்து வருவதால் மழைக் காலங்களில் மக்கள் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பருக வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தேங்கும் மழைநீரை வழிந்தோடச் செய்ய ஏதுவாக ஜே.சி.பி., மோட்டார்களைக் கொண்டு விரைவாக செயல்பட மாநகராட்சிப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் மழைக்கால சிறப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுவீடாகச் சென்று கொசு ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதவிர மழைக்கால நோய்களைத் தடுக்கும் வகையில் மாநகராட்சியின் கீழ் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு குடிநீர் விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சில இடங்களில் மழைநீர் தேங்குவதும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர். அங்கு மழைநீரை வடிகால் ஓடை மூலம் அப்புறப்படுத்த தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai