Enable Javscript for better performance
அம்மிக் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மானூர் அருகே தலையில் அம்மிக் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
    சுத்தமல்லி அத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை (40). கூலித் தொழிலாளியான இவருக்கும், மானூர் லெட்சுமியாபுரத்தைச் சேர்ந்த இசக்கியம்மாளுக்கும் (38) திருமணம் நடைபெற்று
    இரு மகள்களும்,ஒரு மகனும் உள்ளனர்.
    மதுப் பழக்கத்துக்கு அடிமையான தங்கதுரை பலரிடம் தகராறு செய்தாராம். இதுதொடர்பாக பத்தமடை,சுத்தமல்லி காவல்நிலையங்களில் அவர் மீது வழக்குகள் உள்ளனவாம்.
    இந்தநிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து லெட்சுமியாபுரத்துக்கு குழந்தைகளுடன் இசக்கியம்மாள் சென்றாராம். அங்கு வியாழக்கிழமை இரவு சென்ற தங்கதுரை தகராறு செய்தாராம். அப்போது இசக்கியம்மாளை அவர் தாக்கினாராம். அப்போது அவரது சகோதரர் ஆறுமுகநயினார் (27) தட்டிக் கேட்டாராம். அவரையும் தங்கதுரை தாக்க முயன்றபோது, ஆறுமுகநயினார் அம்மிக்கல்லை தூக்கி போட்டதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இக் கொலை தொடர்பாக ஆறுமுகநயினார்  மானூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
    தகவலறிந்ததும் மானூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai