Enable Javscript for better performance
இளையோர் எழுச்சி தின பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் இளையோர் எழுச்சி தின பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    மாவட்ட நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்தப் பேரணியை ஆட்சியர் மு.கருணாகரன் தொடங்கி வைத்தார். முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன், தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் வில்சன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு, நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் தேவிபிச்சை ஆகியோர் பேசினர். பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணிநகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து வ.உ.சி. திடலை அடைந்தது.
    பேரணியில் தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி, இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளி,குழந்தை யேசு மேல்நிலைப் பள்ளி, கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி,மேரி சார்ஜென்ட் பள்ளி,தூய யேவான் பள்ளி,சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளி, முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி களைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்,தொண்டர்கள்,திட்ட அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் விழிப்புணர்வு வாசங்களை கையில் ஏந்தியபடி மாணவர்கள் பேரணியில் வலம் வந்தனர்.
    பல்கலை. யில்...
    திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, பதிவாளர் அ. ஜான் டி பிரிட்டோ தலைமை வகித்தார்.  பல்கலைக்கழக இளைஞர் நலத்துறை இயக்குநர் (பொ) வெளியப்பன் வரவேற்றார். தமிழ்த் துறைப் பேராசிரியர் ராமசாமி, இளைஞர் எழுச்சி தினம் குறித்து பேசினார்.
    இதையொட்டி, கலாமிடம் நான் கற்றது, கலாம் நாட்டுப்பற்றின் ஓர் உண்மையான அடையாளம் ஆகிய தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
    இதில், வெற்றிபெற்றவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.  கல்வியியல் துறை உதவிப் பேராசிரியர் லெனின் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai