Enable Javscript for better performance
கால்நடை மருத்துவக் கல்லூரியில் உலக முட்டை தினம்- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டது.
    ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டுக்கான உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் மா. திருநாவுக்கரசு தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக திட்டக் குழு உறுப்பினர் எம். மகாலிங்கம்,கல்லூரியின் பயிற்றுவிக்கும் கால்நடைப் பண்ணை வளாக பேராசிரியர் எட்வின் ஆகியோர் பேசினர்.
    கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்நாதன்,மாணவர் நலக் குழுத் தலைவர் ஜான்சன் ராஜேஷ்வர் உள்ளிட்ட பலர் பேசினர். விழாவில் அனைவருக்கும் முட்டையால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகை உணவுகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai