Enable Javscript for better performance
குடிநீர் சிக்கனம்: ஆணையர் அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    குடிநீராதாரப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக மேலும் கூறியது: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் குடிநீர் விநியோகமானது தாமிரவருணி ஆற்றுப்படுகையை நம்பியே உள்ளது. அங்கு அமைந்தள்ள 12 தலைமை குடிநீரேற்று நிலையங்கள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் நிலையங்களுக்கு ஆற்றில் உள்ள 46 நீர் உறிஞ்சும் கிணறுகள் மூலம் தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது. தற்போது வறட்சி நிலவுவதால் நீர் உறிஞ்சும் கிணறுகளிலும், அருகில் உள்ள பகுதிகளிலும் நீர்வரத்து இல்லை.
    எனவே, இயந்திரங்கள் மூலமாக செயற்கை வாய்க்கால் அமைத்து நீர் உறிஞ்சும் கிணறுகளுக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய குறைந்த அளவே குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் குடிநீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார் ஆணையர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai