Enable Javscript for better performance
தடகளப் போட்டிகளில் சாதனை: மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலியில் தடகளம், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் சாதனை படைத்த விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கு ஜிம்னாஸ்டிக் அரங்கில் பெற்றோர், பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர்ஜோதி சற்குணம் தலைமையில் நடைபெற்றது.
    தமிழ்நாடு நீச்சல் கழகப் பொருளாளர் சேது திருமாறன், விவேகானந்தா மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் ராஜலட்சுமி, மு.ந. அப்துல்ரஹ்மான், பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.ஏ.எப். அப்துல்காதர், உதவி தலைமையாசிரியர் எம்.எஸ்.ஏ. அப்துல்காதர், கிறிஸ்துராஜா பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன், ராமகிருஷ்ணன், ஜிம்னாஸ்டிக் பயிற்றுநர் தாசன், குத்துச்சண்டை பயிற்றுநர் சிவகுமார்பால், தடகளப் பயிற்றுநர் முத்துக்குமார், நீச்சல் பயிற்றுநர் கர்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    இதையடுத்து நடைபெற்ற விழாவில், 28 ஆவது தென்மண்டல தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் பி.எர்னஸ்ட்பிரவீன்தயா, வி. சக்திகிஷோர், எம். குமார் மற்றும் கூடைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற ஹரிஸ், மாநில இளையோர் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்கள், மாநில ஹாக்கி, தேசிய நீச்சல் போட்டி, டென்னிஸ், மாநில ஜிம்னாஸ்டிக், குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்கள், அவர்கள் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai