Enable Javscript for better performance
நெல்லையில் எஸ்டிபிஐ போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியினர் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தலைமை வகித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் முபாரக் பேசினார். திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி,துணைத் தலைவர் எஸ்.எஸ்.அப்துல்கரீம், செயலர் ஹயாத் முஹம்மது,தொகுதி நிர்வாகிகள் காசிம், சேக் தாவுது,சேக் சாலி,மூசல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai