Enable Javscript for better performance
நெல்லை அருகே ரயில் மோதி தனியார் நிறுவன தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி அருகே ரயில் மோதி தனியார் நிறுவன தொழிலாளி வெள்ளிக்கிழமை இறந்தார்.
    திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து அருகே ரயிலில் அடிபட்ட நிலையில் இளைஞர் சடலம் தண்டவாளம் அருகே கிடப்பதாக திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
    சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    விசாரணையில் சடலமாகக் கிடந்தவர் தென்காசி அருகேயுள்ள காசிமேஜர்புரம் நேதாஜி தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் முருகன் (32) என்பது தெரியவந்தது. கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முருகன், தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai