Enable Javscript for better performance
பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    பல்கலைக்கழகத்தில் கல்லூரி விரிவுரையாளருக்கான தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.  2015இல் டிசம்பர், நிகழாண்டு ஜூன் மாதங்களில் நடைபெற்ற தேசிய தகுதித் தேர்வில் இப் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    இதில், எஸ். ஜமால்பாத்திமா, ஆர்.  ஹெல்டாபிரின்சி,  வி. ராமனாதன், எஸ். அனுக்குமார் கதிர்வேல், ஆர். லையோலாராஜ் ஆகியோர் முறையே நெட் ஜெஆர்சி, நெட் எல்எஸ் பிரிவில் தேர்ச்சி பெற்றனர். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைவேந்தர் கே. பாஸ்கர், பதிவாளர் அ. ஜான் டி பிரிட்டோ, ஒருங்கிணைப்பாளர்கள் கே. செல்வகுமார், ஜி. பாலசுப்பிரமணியராஜா, ஆர். செல்வராஜ் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai