Enable Javscript for better performance
பாலியல் துன்புறுத்தல்: அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு ஆட்சியர் அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் துன்புறுத்தல்: அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு ஆட்சியர் அறிவுரை

    By DIN  |   Published on : 15th October 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு, தனியார் மருத்துவமனையில் பாலியல் பாதிப்புக்கு ஆளாகி 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டால் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
    திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கருதப்படும் 18 வயதுக்கு உள்பட பெண் குழந்தைகள் மகப்பேறு தொடர்பாக அனுமதிக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட அரசு, தனியார் மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
    மேலும் அனைத்து மருத்துவமனைகளில் குழந்தைகள் தத்தெடுத்தல் நிகழ்வின்போது, இளைஞர் நீதிச் (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015-ன் விதிகள் மற்றும் மத்திய குழந்தைகள் தத்து வளமைய நிறுவனத்தின் நெறிமுறைகளை கடைப்பிடித்தலை உறுதி செய்யவேண்டும்.
     மேலும் கைவிடப்பட்ட குழந்தைகள் குறித்து உடனடியாக குழந்தைகள் நலக்குழுக்கு தெரிவிக்க வேண்டும் அல்லது ஒப்படைக்க வேண்டும்.  அனைத்து அரசு, தனியார் மருத்துவமனையில் திருநெல்வேலி குழந்தை நலக்குழு, சிறப்பு தத்து மையத்தின் தொடர்பு தொலைபேசி எண், முகவரி ஆகியன அவசியம் இருக்க வேண்டும்.
    தத்து மைய முகவரி: சரணாலயம், திருநெல்வேலி சமூக சேவை சங்க தத்து மையம், 283-2ஏ, பாபுஜிநகர், திருநெல்வேலி. தொலைபேசி எண் 0462 2321170. குழந்தை நலக்குழு முகவரி:  சரணாலயம், பாபுஜி நகர், திருநெல்வேலி, தொலைபேசி எண் 0462 2321098.
    தேவைப்பட்டால் மேற்கண்ட தகவலை காட்சிப்படுத்துதல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai