Enable Javscript for better performance
பாளை. அருகே மினி லாரி கவிழ்ந்து பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டை அருகே மினி லாரி கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் பெண்  இறந்தார்.
    திருநெல்வேலி சி.என்.கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி மனைவி மகராசி (33). கட்டடத் தொழிலாளியான இவரும்,மேலும் இரு பெண் தொழிலாளர்களும் பாளையங்கோட்டை அருகேயுள்ள வெள்ளகோவில் பகுதியில் இருந்து செங்கல் ஏற்றிக் கொண்டு மினி லாரியில் சென்று கொண்டிருந்தனராம். அங்குள்ள குறுகலான பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
    இதில் பலத்த காயமடைந்த மகராசி சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மினி லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai