Enable Javscript for better performance
பெண் காவலர் தற்கொலை வழக்கு: பயிற்சி உதவி ஆய்வாளர் இடைநீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெண் காவலர் தற்கொலை வழக்கு: பயிற்சி உதவி ஆய்வாளர் இடைநீக்கம்

    By DIN  |   Published on : 15th October 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே பெண் காவலர் தற்கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
     இதுதொடர்பாக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
    அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவர் ராமு (29). இவர், கடந்த 14-2-2016இல் கொடுத்த புகாரில், பாப்பாக்குடி காவல் நிலையத்தில் பணியாற்றிய முதல்நிலைக் காவலர் அருமைநாயகம், திருமணம் செய்வதாகக் கூறி தகாத உறவு கொண்டதாகத் தெரிவித்திருந்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, 2016ஆம் ஆண்டுக்கான நேரடி சார்பு ஆய்வாளர் பதவிக்கு தேர்வாகிய அருமைநாயகம், சென்னை போலீஸ் அகாதெமியில் பயிற்சியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி வீரவநல்லூர் அருகேயுள்ள தமது வீட்டில் விஷம் குடித்த ராமுவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் 11ஆம் தேதி உயிரிழந்தார்.
    இதுகுறித்து வீரவநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் பயிற்சியில் இருந்த அருமைநாயகம் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அருமைநாயகத்தை உதவி ஆய்வாளர் பயிற்சியில் இருந்து இடைக்கால பணிநீக்கம் செய்து போலீஸ் அகாதெமியின் தலைவர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார் எனச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    உடலை வாங்க மறுப்பு: தற்கொலை செய்துகொண்ட பெண் காவலர் ராமுவின் சடலம் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். தற்கொலைக்குக் காரணமான அருமைநாயகத்தை கைது செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தொடர்ந்து 4ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் உடலை வாங்கவில்லை. அருமைநாயகத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள இடைநீக்கம் நடவடிக்கையை கூறி உறவினர்களை போலீஸார் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai