Enable Javscript for better performance
வாலிபால் போட்டி: அரையிறுதிக்கு  தூத்துக்குடி, குமரி மாவட்ட அணிகள் தகுதி- Dinamani

சுடச்சுட

    

    வாலிபால் போட்டி: அரையிறுதிக்கு  தூத்துக்குடி, குமரி மாவட்ட அணிகள் தகுதி

    By DIN  |   Published on : 15th October 2016 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான வாலிபால் போட்டியில்,  நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் கல்லூரி அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
    திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் பல்கலைக்கழக அளவிலான வாலிபால் போட்டி வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    இப்போட்டியில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 45 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.  2ஆம் நாளான வெள்ளிக்கிழமை  நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் காலிறுதியில் பங்கேற்றன. இப்போட்டியை  பல்கலைக்கழக தேர்வாணையர் எஸ். பிரபாகர், நாட்டுநலப் பணித் திட்ட இயக்குநர் என். ராஜலிங்கம் ஆகியோர் தொடங்கிவைத்தனர். உடற்கல்வியியல் துறைத் தலைவர் ச. சேது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    தூய சவேரியார் கல்லூரி அணியை ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி அணி 2-0 என்ற புள்ளி கணக்கிலும், வ.உ. சிதம்பரனார் கல்லூரி அணியை அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அணி 2-0 என்ற புள்ளி கணக்கிலும், எஸ்.டி.  இந்து கல்லூரியை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி 2-1 என்ற புள்ளி கணக்கிலும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி அணியை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அணி 2-1 என்ற புள்ளி கணக்கிலும் வென்றன.
    இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அணிகள் மோதுகின்றன.  இதில், வெற்றிபெறும் அணிகள் மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கின்றன.
    இதையடுத்து நடைபெறும் விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கே. பாஸ்கர், சுழற்கோப்பை வழங்குகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai