Enable Javscript for better performance
விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி அருகேயுள்ள தச்சநல்லூரில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    ராமையன்பட்டி யாதவர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி (35). கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். தச்சநல்லூர் அருகே நல்மேய்ப்பர் நகர் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த வெள்ளைப்பாண்டி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை இறந்தார். இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai