கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை அதிகாலையில் லாரி மீது பேருந்து மோதியதில், இளைஞர் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்.
குமரி மாவட்டம் குலசேகரத்திலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, மதுரை கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி பகுதியில், முன்னால் சென்றுகொண்டிருந்த லாரிமீது மோதியுள்ளது. இதில், பேருந்தில் பயணம் செய்த, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (30), இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். ஓட்டுநர்களான முத்து, ஆனந்தன் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.