புளியங்குடியில் விவசாயியைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புளியங்குடி டி.என்.புதுக்குடி வேதக்கோயில் ஒட்டாக்குடி தெருவைச் சேர்ந்தவர் செல்வம்(40). இவருக்குச் சொந்தமான எலுமிச்சைத் தோட்டம், புளியங்குடிக்கு மேற்கே சுண்ணாம்புப் பருத்தி ஓடைப் பகுதியில் உள்ளது. அங்கு அவர் தண்ணீர் பாய்ச்சச் சென்றபோது, பக்கத்துத் தோட்ட உரிமையாளரான புளியங்குடி மேலமந்தை நடுத்தெருவைச் சேர்ந்த மணிகண்டன் "தனது தோட்டத்தில் எலுமிச்சம்பழங்களைப் பறித்தது யார்?' எனக் கேட்டு தனது உறவினர்களான வல்லப விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன், சுரண்டை கோட்டைத் தெருவைச் சேர்ந்த அழகேசன் ஆகியோருடன் சேர்ந்து செல்வத்தைத் தாக்கினாராம். இதில், காயமடைந்த அவர் அளித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
சிவகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை, நீதிபதி நிலவேஸ்வரன் விசாரித்து மணிகண்டன் உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ரூ. 1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.