நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பபட்ட தெற்கு புறவழிச் சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி, சிவசேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பபட்ட தெற்கு புறவழிச் சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி, சிவசேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 42 மதுக்கடைகள் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைகளில் உள்ள இந்த கடைகளை அகற்றிவிட்டு வேறு பகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பெரும்பாலான இடங்களில் மதுக்கடை அமைக்க முடியவில்லை.
திருநெல்வேலி, தெற்கு புறவழிச் சாலையில் மூடப்ப்ட்ட கடைகளுக்கு பதிலாக அதே பகுதியில் சாலையில் இருந்து சிறிது தொலைவில் ரயில்வே தண்டவாளம் அருகே மதுக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் மற்றும் சிவ சேனா அமைப்பினர் மதுக்கடை அமையும் இடத்தில் அமர்ந்து புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸார் அவர்களை சமரசம் செய்து ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் மேலாளரிடம் மனு அளிக்க கோரியதால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com