மாநில அளவிலான ஸ்பார்டன் டிராபி கிரிக்கெட் போட்டியில் ஆலங்குளம் நல்லூர் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மாநில அளவிலான ஸ்பார்டன் டிராபி கிரிக்கெட் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. மாநிலம் முழுவதுமிருந்து பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் இப்போட்டியில் கலந்துகொண்டன. பள்ளிகளுக்குத் தனியாகவும் கல்லூரிகளுக்குத் தனியாகவும் நடைபெற்ற இப்போட்டியில் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் சிறந்த தொடர் நாயகன் மற்றும் ஆட்டநாயகன் விருதை நல்லூர் கல்லூரி மாணவர் விஷ்ணுகுரு பெற்றார்.
போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்களை கல்லூரியின் முதல்வர் ஜே. ஜோயல், உடற்கல்வி இயக்குநர் ஜூலியன்ஸ் ராஜாசிங், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.