குற்றாலத்தில் கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சமுதாய நலக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றாலம்-தென்காசி பிரதான சாலையில் தென்காசி சாலை தங்கும் விடுதி எதிரில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி கடந்த திமுக ஆட்சிகாலத்தில் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் வீ.கருப்பசாமிபாண்டியனால் தொடங்கிவைக்கப்பட்டது.
முதல் கட்டமாக அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளாக குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி பொதுநிதித்திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சத்தில் தரைத்தளம், அதனையடுத்து ரூ. 19லட்சத்தில் முதல்தளம் கட்டும்பணி கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று தற்போது பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிட்டன. ஆனாலும் சமுதாயநலக்கூடம் மக்களின் பயன்பாட்டிற்கு இன்னும் திறந்துவிடப்படவில்லை.
விரைவில் குற்றாலத்தில் சீசன் தொடங்க உள்ளநிலையில் இந்த சமுதாய நலகூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டால் சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே சமுதாய நலக்கூடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு திறந்துவிடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.