திருநெல்வேலி சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மாற்றுத்திறனாளி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்குச் சொந்தமான பெட்டிக்கடை திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்தது. அதனை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் ராமச்சந்திரன் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் அதிகாரிகள் அந்தக் கடையையும், அருகேயிருந்த மற்றொரு கடையையும் அகற்றினர். அப்போது ராமச்சந்திரன், தான் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முறையிட்டார். இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு வேறு ஒரு இடத்தில் கடையை நடத்த அனுமதிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சந்திப்பு பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.