தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசில் 7ஆவது ஊதியக்குழு அமல்படுத்துவதற்கு முன்பாக 6 ஆவது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்த பின்பு ஊதியக்குழு அமல்படுத்த வேண்டும்.
ஊதியக்குழுப் பரிந்துரைகளை அமல்படுத்தும் முன்பாக 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தமிழக அரசு அலுவலர்களுக்கு பிரத்யேக நிர்வாகத் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். அரசு அலுவலர்களுக்கு தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் சு.அருணாசலம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ந.தண்டபாணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் இரா.மாயாண்டிபாரதி, ஏ.ஜான்குழந்தைராஜ், எம்.பி.ராதாகிருஷ்ணன், இரா.சீத்தாராமன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டப் பொருளாளர் சிவ.நக்கீரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.