திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் புதன்கிழமை மீட்டனர்.
சுத்தமல்லியில் கோபாலசமுத்திரம் சாலையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுத்தமல்லி போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாகக் கிடந்தவர் பிரவுன் நிற பேன்ட்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.