புளியரை கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்துக்குள்பட்ட புளியரை கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மு. கருணாகரன்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்துக்குள்பட்ட புளியரை கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டத்துக்குள்பட்ட புளியரை கிராமத்தில் கிராம உதவியாளர் பணியிடம் காலியாகவுள்ளது. இக் காலிப் பணியிடத்துக்கு இன சுழற்சி அடிப்படையில் தகுதியுடைய பதிவுதாரர்களின் பட்டியல் திருநெல்வேலி வேலைவாயப்பு அலுவலகம் மூலம் கோரப்பட்டுள்ளது.  இப்பணியிடமானது, ஆதிதிராவிடர் முன்னுரிமையுள்ளவர் பிரிவினருக்கு இனசுழற்சி அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பகுதியைச் சேர்ந்த 21 முதல் 35 வயதுக்குள்பட்ட 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும்.  விருப்பமுள்ள நபர்கள் தங்களது சுய விவரங்களை தனித்தாளில் குறிப்பிட்டு, இருப்பிட சான்றிதழ், நன்னடத்தை சான்றுடன் இணைத்து விண்ணணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலக முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமோ மே 31ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு நேர்முத் தேர்வு, சான்றிதழ் சரிபாப்ப்பு நடைபெறும் நாள், இடம் குறித்து தனியாக கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். தேர்வில் பங்கேற்கும் நபர்களுக்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அசல் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். இதில், திருப்திகரமான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.  நியமனக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் இந்தப் பணியிடம் முற்றிலும் தாற்காலிகமானது. பணி நியமனத்தை எந்த நேரத்திலும் ரத்து செய்யும் அதிகாரம் வட்டாட்சியருக்கு உண்டு. காலிப் பணியிடங்கள் அனைத்தும் ஒளிவுமறைவு இல்லாமல் பூர்த்தி செய்யப்படும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். சான்றுகள் போலி என தெரியவந்தால் தொடர்புடையோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com