தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் சம்மேளன மண்டல மாநாடு திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை (மே 30) நடைபெறுகிறது.
இதுகுறித்து அமைப்பின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் அ. ராமசுவாமி புதன்கிழமை கூறியது: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய திருநெல்வேலி மண்டல மாநாடு செவ்வாய்க்கிழமை (மே 30) திருநெல்வேலி சந்திப்பிலுள்ள ராஜ்மஹாலில் நடைபெறுகிறது. ஓய்வூதியர்களுக்கான மாதாந்திர மருத்துவப் படியை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 1.50 லட்சமாக உயர்த்த வேண்டும். 20 ஆண்டுகளில் பணி செய்தால் முழு ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி அளிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இம்மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில், மாநில பொதுச்செயலர் வே. ஜெகநாதன், அமைப்புச் செயலர் கோவை எஸ்.ஏ. சுந்தரராஜன், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.