ரமலான் நோன்பு: நெல்லையில் நாளை ஹிலால் கமிட்டி கூட்டம்

ரமலான் பிறை தொடங்குவது குறித்து ஹிலால் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை (மே 26) நடைபெறுகிறது.
Updated on
1 min read

ரமலான் பிறை தொடங்குவது குறித்து ஹிலால் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை (மே 26) நடைபெறுகிறது.
இதுகுறித்து திருநெல்வேலி ஜூம்ஆ மஸ்ஜித் ஜமாத் சபையின் செயலர் வெளியிட்ட அறிக்கை: ரமலான் பிறை சம்பந்தமாக திருநெல்வேலி சந்திப்பு ஜூம்ஆ பள்ளிவாசலை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 26) இரவு 7 மணிக்கு இப்பள்ளிவாசலில் நடைபெறுகிறது.
ரமலான் பிறை பார்த்து நோன்பைத் தொடங்குவது குறித்து தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படும். ஆகவே, இவ்விரு மாவட்டங்களில் எந்தப் பகுதியில் பிறை தென்பட்டாலும் முஸ்லிம்கள் உடனடியாக 0462 2330897 என்ற தொலைபேசி எண், 94431 36082, 94432 36082, 94433 33984, 94424 58502, 99762 84502, 98421 86534, 98941 79558 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com