திருநெல்வேலியில் கண்தானம் செய்தல் குறித்த விழிப்புணர்வு கோலப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் 32 ஆவது தேசிய கண்தான இருவார விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி இன்னர்வீல் கிளப், அரவிந்த் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு கோலப் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் 18 குழுக்களாக மகளிர் பங்கேற்றனர். போட்டியினை துணை தலைமை கண் மருத்துவர் ரா. மீனாட்சி தொடங்கிவைத்தார். இன்னர்வீல் கிளப் துணைத் தலைவர் பிச்சம்மாள், செல்லம்மாள் ஆகியோர் நடுவராக செயல்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு இன்னர்வீல் கிளப் தலைவி பாரதிரதி தலைமை வகித்தார். தலைமை கண் மருத்துவர் ஆர். ராமகிருஷ்ணன், கவிஞர் கோ. கணபதிசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
வெற்றி பெற்றவர்களுக்கு மகளிர் திட்ட இணை இயக்குநர் கெட்சிலிமாஅமலினி பரிசுகள் வழங்கினார். மகளிர் திட்ட உதவி அலுவலர் அருண் ஜெ.பி. பிரசாத், மருத்துவர்கள் கலந்துகொண்டனர். கண் மருத்துவர் வே. அனிதா வரவேற்றார். மருத்துவர் மீனாட்சி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.