மணிமுத்தாறு-மாஞ்சோலை சாலையை சீரமைக்கக் கோரி, பாரதீய ஜனதா கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.
பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் தயாசங்கர் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: மேற்குத்தொடர்ச்சி மலையில் மணிமுத்தாறு அருவிக்கு மேல்பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி பகுதிகளில் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள்.
கல்வி, மருத்துவம், அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு இப் பகுதி மக்கள் சாலை வழியாக கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கிறார்கள். மணிமுத்தாறு-மாஞ்சோலை இடையேயான சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதுதவிர மாஞ்சோலையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே, சாலையைச் சீரமைக்கவும், ஏற்கெனவே இயக்கப்பட்ட பேருந்தை தொடர்ந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.