Enable Javscript for better performance
சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி

    By DIN  |   Published on : 16th March 2017 09:00 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலியில் சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையம் சார்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் நடைபெற்ற இப் பயிற்சியில், பேராசிரியை உ.விஜயலட்சுமி, பதிகங்களுக்கு விளக்கம் அளித்து தலத்தின் சிறப்புகளை விளக்கினார். தேவார இன்னிசை ஆசிரியர் சோ.சொக்கலிங்கம், பண்ணோடு பதிகம் பாட பயிற்சி அளித்தார். மாணவர்கள் ச.முருகேசன், கஸ்தூரி ஆகியோர் மகேஸ்வர பூஜை நடத்தினர்.
    இதில், பயிற்சி வகுப்பில் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அமைப்பாளர் கு.முத்துசுவாமி தலைமையில் கணேசன், வள்ளிநாயகம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். அடுத்தப் பயிற்சி வகுப்பு ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

     

     

    kattana sevai