Enable Javscript for better performance
கடன் கேட்டவரைத் தாக்கியதாக இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கல்லிடைக்குறிச்சி அருகே கடன் கேட்ட துப்புரவுப் பணியாளரை அவதூறாகப் பேசி தாக்கியதாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்குப் பாப்பான்குளம்,  மயிலாடும்பாறை காலனியைச் சேர்ந்தவர் பாலன் (50). துப்புரவுப் பணியாளரான இவர்,  அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த துரை மகன் கிருஷ்ணன் என்பவரிடம்,  தீபாவளிக்காக  கடன் கேட்டாராம்.
     கிருஷ்ணன் பணம் கொடுக்க மறுத்ததோடு அயன்சிங்கம்பட்டி, ஆலடி தெருவைச் சேர்ந்த ஐயப்பனுடன் சேர்ந்து அவதூறாகப் பேசி தாக்கினராம்.  இதில் காயமடைந்த பாலன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து ஐயப்பன், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai