Enable Javscript for better performance
பாளை. அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டை அருகே  சனிக்கிழமை பெண்ணிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    பாளையங்கோட்டை அருகே வி.எம். சத்திரம் காமராஜர் தெருவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மனைவி ராமலட்சுமி (53).  இவர்,  அங்குள்ள கடைக்குச் சென்று வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாராம்.
    அப்போது, மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர் ராமலட்சுமி அணிந்திருந்த இரண்டரை பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி விட்டனர். புகாரின்பேரில்,  பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai