தேசிய கைத்தறி தினத்தையொட்டி பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை (ஆக.7) நடைபெறும் விழாவில் 136 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
தேசிய கைத்தறி தினம் ஆக. 7 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.இதையொட்டி, பாளையங்கோட்டை, கிருஷ்ணாபுரத்தில் மகாத்மா காந்தி கூட்டுறவு சங்கத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் மாநில ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டுறவு அமைப்புகளின் தலைவர், பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
விழாவில், கைத்தறி நெசவாளர் களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம், முத்ரா திட்டத்தில் கடனுதவி உள்பட 136 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இத்தகவலை திருநெல்வேலி சரக கைத்தறி துணிநூல் உதவி இயக்குநர் அ. மாரியப்பன் தெரிவித்தார்.