சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003, விதி 12 துணை விதி (1)-ன் படியும், அரசு ஆணை எண். 50, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை நாள் 29.10.2012-ன்படியும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்திற்கும் சுதந்திர தினத்தன்று விடுமுறையாகும்.
எனவே, அன்றைய தினம் மதுபான விற்பனை, மதுபானத்தை பதுக்கிவைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.