Enable Javscript for better performance
ஆலங்குளத்தில் திடீர் மழை- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்குளத்தில் வியாழக்கிழமை மாலையில் திடீரென மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    ஆலங்குளம் பகுதியில் நிகழாண்டு பருவமழை ஓரளவே பெய்தது. இதனால் வட்டாரத்திலுள்ள எந்த குளங்களும் நிரம்பவில்லை. கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்த அளவே பெருகியது. தொடர்ந்து மழை பொழியும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான விவசாயிகள் நெல் நடவு செய்தனர். 
    நடவு செய்த நெற்பயிர்கள் பிழைக்குமா என விவசாயிகள் காத்திருந்தநிலையில் ஆலங்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களாக மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை பகலில் வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. மாலை 6 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மேலும் ஓரிரு தினங்கள் இந்த மழை தொடர்ந்தால் நடவு செய்துள்ள நெற்பயிர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai