Enable Javscript for better performance
எப்.எக்ஸ். கல்லூரியில் தேசிய கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
    கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை சார்பில் நடைபெற்ற 15 ஆவது கருத்தரங்கிற்கு ஸ்காட் கல்வி குழுமங்களின் நிறுவனர் எஸ். கிளிட்டஸ்பாபு தலைமை வகித்தார். 
    கல்லூரியின் முன்னாள் மாணவரும், பெங்களூரு தனியார் நிறுவன வடிவமைப்புத் தலைவருமான ஜோக்கிம்ராஜா நியூட்டன், பங்கேற்று கருத்தரங்கினை தொடங்கி வைத்தார்.முதல்வர் வி. இளங்கோவன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து துறைத் தலைவர் ஆர். வேதபிரயாவதனா, ஜி. ராஜ்குமார் ஆகியோர் பேசினர். ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டது.
    இதில், பொதுமேலாளர் க. ஜெயக்குமார், இக்னேஷியஸ்சேவியர், நிர்வாக அலுவலர் எஸ். கிருஷ்ணகுமார், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    மாணவர் அரவிந்தன் வரவேற்றார். மாணவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai