Enable Javscript for better performance
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சொற்பொழிவு- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. 
    கல்லூரி தமிழ்த் துறையின் சீதக்காதி தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் மு. முஹம்மதுசாதிக் தலைமை வகித்தார்.  கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர் கே.ஏ. மீரான்முகைதீன்,  சென்னை புதுக் கல்லூரி பேராசிரியர்கள் எம். பீர் அகமது புகாரி, எஸ். முகம்மது ஜியாவுல் ஹக்,  முகம்மது தௌபிக்,  வாசகர் வட்ட துணைத் தலைவர்  ஜெயபாலன், முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    நிகழ்ச்சியில், கவிதை எனும் பெருவரம் எனும் தலைப்பில் சென்னை கவிதை உறவு அமைப்பு நிறுவனர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் பேசியது:   படைப்பிலக்கியங்கள் வாழ்வை உயர்த்தும். ஆகவே, மாணவர்கள் படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  கவிதை மொழி கூர்மையானது சமூகத்தின் அவலங்களைப் படம் பிடித்துக் காட்டும்.  இப்பருவத்தில் வாசிப்பது, எழுதுவதிலும்  மாணவர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றார்  அவர்.
    தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் அ. ஷேக் சிந்தா, ந. ஜிதேந்திரன், செல்வ சுகன்யா, மாலிக், மாணவர்கள் கலந்து கொண்டனர்.  தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன் வரவேற்றார். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அ.மு. அயூப்கான் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai